பிரதமர் அலுவலகம்
குச்சி ரங்காவ் ஜெலியாங்கின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 8:00AM by PIB Chennai
நாகாலாந்து துணை முதலமைச்சர் திரு டி ஆர் ஜெலியாங்கின் மகனான குச்சி ரங்காவ் ஜெலியாங்கின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, மறைந்த ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நாகாலாந்தின் துணை முதலமைச்சர் திரு டி ஆர் ஜெலியாங்கின் மகனான குச்சி ரங்காவ் ஜெலியாங்கின் மரணத்தால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்தத் துயரமான நேரத்தில், ஜெலியாங் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்."
(Release ID: 2321628)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321676)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam