பிரதமர் அலுவலகம்
அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்த கிரெனடா பிரதமருக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 7:21PM by PIB Chennai
அரசுத் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் சேவையாற்றியதை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கிரெனடா பிரதமர் திரு டிக்கன் மிட்செலுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் கிரெனடாவுக்கும் இடையிலான நட்புறவை தாம் மிகவும் உயர்வாகக் கருதுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“பிரதமர் திரு டிக்கன் மிட்செல் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா, கிரெனடா இடையிலான நட்புறவை நான் பெரிதும் மதிக்கிறேன். நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருக்கிறேன்.
@hondickon”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320944®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321081)
வருகையாளர் எண்ணிக்கை : 5