நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இமாச்சலப் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில், மக்கள் சந்திப்பு நிகழ்வு

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 5:19PM by PIB Chennai

இமாச்சலப்பிரதேசத்தில், குலு மாவட்டத்தில் உள்ள மலானாவில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (சிபிஎன்) மக்கள் சந்திப்ப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (சிபிஎன்), இளையோர் பாதுகாப்பு முன்முயற்சிகளின் கீழ், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பணிகளின் ஒரு பகுதியாகவும், இந்தியாவின் தேசிய போதைப்பொருள், மனோவியல் பொருட்கள் கொள்கை, போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்த 2026–2029 தொலைநோக்குப் பார்வை ஆவணத்தின்படி, சட்டவிரோத போதை பொருட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாற்று மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான சிபிஎன்-ன் ஆணையை நிறைவேற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் உள்ள மலானா கிராமத்தில் அக்டோபர் 6, 2026 அன்று மக்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது.

இந்த முன்முயற்சி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் போதைப்பொருள் பயன்பாடற்ற இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை மேலும் முன்னெடுத்துச் செல்வதுடன், போதைப்பொருள் தடுப்பு தொடர் விழிப்புணர்வு, இளையோர் ஈடுபாடு, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு பெரிதும் பங்களிக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320223&reg=3&lang=1    

***

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2320964) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Telugu