பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா-அர்ஜென்டினா கூட்டு ராணுவ மலையேறும் குழுவிற்கு ராணுவத் தலைமைத் தளபதி வரவேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 5:33PM by PIB Chennai
அபி காமின் மலையில், 7,355 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை செப்டம்பர் 17 அன்றும், காமெட் மலையின் 7,756 மீட்டர் உயர சிகரத்தை செப்டம்பர் 21, 2026 அன்றும் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ள இந்தியா-அர்ஜென்டினா கூட்டு ராணுவ மலை ஏற்றக் குழுவினருக்கு, ராணுவத் தலைமைத் தளபதி தளபதி தீரஜ் சேத் இன்று புதுதில்லியில் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள காமெட் சிகரம், கஞ்சன்ஜங்கா, நந்தா தேவி சிகரங்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிகரமாகும்.
லெப்டினன்ட் கர்னல் சிராக் சாட்டர்ஜி தலைமையிலான 35 பேர் கொண்ட இக்குழுவில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 25 வீரர்களும், அர்ஜென்டினா ராணுவத்தைச் சேர்ந்த 10 வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவினர் ஆகஸ்ட் 21, 2026 அன்று புது தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்திலிருந்து தங்களது பயணத்தைத் தொடங்கினர்.
இந்தச் சாதனை அவர்களது உடல் வலிமை, மன உறுதி, தொழில்நுட்பத் திறன், நெருக்கமான ஒருங்கிணைப்பு ஆகிய அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319709®=3&lang=1
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320925)
வருகையாளர் எண்ணிக்கை : 5