புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
நாட்டில் காற்றாலை எரிசக்தி திறன் வலுப்பெற்றுள்ளது – மத்திய அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 3:58PM by PIB Chennai
காற்றாலை எரிசக்தி இந்தியா 2026-வது மாநாட்டின் 8-வது பதிப்பை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி 2026 அக்டோபர் 8 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு அக்டோபர் 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக எரிசக்தி துறை அமைச்சர் திரு சி.டி.ஆர்.நிர்மல் குமார், மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள், காற்றாலை எரிசக்தி சங்க பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி நாட்டின் எரிசக்தி துறையில் பெரும் வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். 2026-ம் நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவில் ஆண்டிற்கு 6.05 ஜிகா வாட் அளவிற்கு நிறுவப்பட்டதன் மூலம் நாட்டில் எரிசக்தி துறை வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவித்தார். 2027-ம் நிதியாண்டில் காற்றாலை எரிசக்தி நிறுவல் திறனைக் கடக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டார். இந்த தொடர்ச்சியான வளர்ச்சி 2030-ம் ஆண்டிற்குள் 100 ஜிகா வாட் அளவிற்கு நிறுவல் திறனை எட்ட வேண்டும் என்ற நமது தேசிய இலக்கை அடைவதற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

2026 செப்டம்பர் 30 வரை 59.20 ஜிகா வாட் அளவிற்கு காற்றாலை எரிசக்தி திறன் நிறுவப்பட்டதன் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் திறனைக் கடப்பதற்கானப் பயணத்தில் நாடு வலுவுடன் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இது காற்றாலை எரிசக்தி உற்பத்தி மற்றம் ஏற்றுமதியில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான வலுவான அடித்தளம் என்று திரு பிரகஹலாத் ஜோஷி கூறினார்.
பின்னர் பேசிய தமிழக எரிசக்தி துறை அமைச்சர் திரு சி.டி.ஆர். நிர்மல் குமார், காற்றாலை எரிசக்தி மேம்பாட்டில் மாநிலத்தின் முக்கிய பங்களிப்பு குறித்தும் புதிய முன்முயற்சிகளை ஊக்குவிக்க மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இம்மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 கண்காட்சியார்களும் 500 பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

***
TV/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2320797)
வருகையாளர் எண்ணிக்கை : 9