பிரதமர் அலுவலகம்
விமானப்படை தினத்தையொட்டி விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 8:15AM by PIB Chennai
விமானப்படை தினத்தையொட்டி விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விமானப்படை வீரர்களால் இந்தியா பெருமிதம் கொள்வதாகவும், நாட்டின் வான்வெளியைப் பாதுகாப்பதில் அவர்களுடைய துணிச்சலுக்கும், அர்ப்பணிப்புக்கும் மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
"நமது விமானப்படை வீரர்களால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.
விமானப்படை தினத்தையொட்டி, நமது வான்வெளியைப் பாதுகாப்பதில் அவர்களுடைய துணிச்சலுக்கும், அர்ப்பணிப்புக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்!".
***
(Release ID: 2320499)
AD/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2320678)
வருகையாளர் எண்ணிக்கை : 6