சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
அக்டோபர் 9 முதல் 15 வரை 'தேசிய அஞ்சல் வாரம் 2026' கொண்டாடப்படவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 4:49PM by PIB Chennai
உலக அஞ்சல் தினமான அக்டோபர் 9-ம் தேதி முதல் 15 வரை ‘தேசிய அஞ்சல் வாரத்தை’ அஞ்சல் துறை கொண்டாடுகிறது. ‘உலக அஞ்சல் தினம்: ஒரு அஞ்சல் கட்டமைப்பு, எல்லையற்ற வாய்ப்புகள்’ என்ற கருப்பொருளில் இந்த ஆண்டின் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
தேசிய அஞ்சல் வாரம் 2026, குடிமக்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப அஞ்சல் சேவைகளை மேலும் வசதியானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் விரைவாகப் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கான இத்துறையின் தொடர்ச்சியான முயற்சிகளில் கவனம் செலுத்தும். ஒரு வார கால கொண்டாட்டங்கள், நவீன, அனைவரையும் உள்ளடக்கிய, குடிமக்களை மையமாகக் கொண்ட அஞ்சல் சூழலியலை உருவாக்குவதில் துறையின் பங்களிப்பின் ஒரு முக்கிய பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319660®=3&lang=1
***
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320339)
வருகையாளர் எண்ணிக்கை : 6