தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அஞ்சல் துறை சார்பில் தில்லியில் குறைதீர்ப்பு முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 1:59PM by PIB Chennai

அஞ்சலக சேவை தொடர்பான குறைகளை, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் வகையில், குறைதீர்ப்பு முகாமிற்கு தில்லி அஞ்சல் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாம், அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தில்லி வட்டம், 3வது தளம், மெஹ்தூத் பவன், புதுதில்லி 110001 என்ற முகவரியில் 2026 அக்டோபர் 28-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. அஞ்சலக சேவை தொடர்பான புகார்களை உதவி இயக்குனர், அஞ்சல் துறை தலைவர், தில்லி வட்டம், புதுதில்லி 110001 என்ற முகவரிக்கு 2026 அக்டோபர் 19-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு புகார்தாரரின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வுகாண்பதே குறைதீர்ப்பு முகாமின் முக்கிய நோக்கமாகும்.  புகார்களை சுருக்கமாகவும், தெளிவாகவும்  எழுத வேண்டும் என்றும் கடைசி தேதிக்குள் கிடைக்கப்பெறாத புகார்கள் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320035&reg=3&lang=1

***

TV/LN/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2320319) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , Bengali-TR , Assamese , English , Urdu , हिन्दी , Punjabi