குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பாரம்பரிய அறிவை பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 4:25PM by PIB Chennai

நாட்டின் பாரம்பரிய அறிவை பாதுகாத்து, பயின்று, அதன் பொருள் உணர்ந்து, எதிர்காலத் தலைமுறையினருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லி குதுப் தொழிற்பேட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஒவ்வொரு இந்திய மொழியும் நாட்டைச் செழுமைப்படுத்தியிருந்த போதிலும், இந்தியாவின் பல மொழிகள் எனும் முத்துக்களை ஒரே மாலையாக இணைக்கும் 'பொன்னூல்' சமஸ்கிருதம் என்று கூறினார்.

இந்த விழாவில் பட்டம் பெறும் மாணவர்கள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் ஆகியோருக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பதில், மாணவர்களை வழிநடத்தியதுடன், சிறந்த இடத்தைப் பெற்ற மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் அவர் வழங்கினார்.

ஒரு சமஸ்கிருத வித்யாபீடமாகத் தொடங்கி, மத்தியப் பல்கலைக்கழகமாக உயர்ந்த, இந்தப் பல்கலைக்கழகத்தின் பயணம் குறித்து எடுத்துரைத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், இதன் நிறுவனரான முன்னாள் பிரதமர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில், சமஸ்கிருதக் கல்விக்கான ஒரு முன்னணி சர்வதேச சீர்மிகு மையமாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்திய அவர், வீரர்களுக்கு வெற்றி, விவசாயிகளுக்கு வெற்றி என்ற அவரது காலத்தால் அழியாத முழக்கம், இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

சம்ஸ்கிருத நீதி மொழிகள் மூலம், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சமஸ்கிருத மொழியை உயிர்ப்புடன் வைத்திருத்தல், 44 ஆண்டுகளாக 'வித்யாபீட பஞ்சாங்கம்' வெளியிடும் மரபு, பிராகிருதம், வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளைக் கற்பித்தல் போன்ற அதன்  முயற்சிகளையும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சி, அதன் நாகரிகப் பாரம்பரியத்தின் வேர்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319609&reg=3&lang=1

(Release ID: 2319609)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319859) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Gujarati , Malayalam