நிதி அமைச்சகம்
வங்கிகள் டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தி, கடன்களுக்கான முழுமையான டிஜிட்டல் செயலாக்க முறையை மேற்கொள்ள வேண்டும்: நிதி சேவைகள் துறை செயலர்
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 5:23PM by PIB Chennai
வங்கிகள் டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தி, கடன்களுக்கான முழுமையான டிஜிட்டல் செயலாக்க முறையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் திரு சஞ்சய் லோஹியா வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் இன்று அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், முக்கிய தனியார் துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அவர் இதனைத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், பிரதமரின் ஜன்-தன் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்துக்கு காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம், பிரதமரின் முத்ரா கடனுதவித் திட்டம், ஸ்டாண்ட் அப் இந்தியா, பிரதமரின் ஸ்வநிதி, பிரதமரின் விஸ்வகர்மா, பிரதமரின் இல்லந்தோறும் சூரிய சக்தி, வேளாண் கடன் அட்டை உள்ளிட்ட பல்வேறு நிதித் திட்டங்களின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வங்கிகளின் நேரடி கிளைகளைத் திறப்பது, வங்கிச் சேவை வசதி இல்லாத கிராமப்புறங்களில் வங்கித் தொடர்பு முகவர்களை நியமிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
இக்கூட்டத்தில், நிதிச் சேவைகள் துறையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319696®=3&lang=1
(Release ID: 2319696)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2319809)
வருகையாளர் எண்ணிக்கை : 8