பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் ருத்ராங்ஷ் பாலாசாஹிப் பட்டேல், ஹிமான்ஷூ திலான், பர்த் ராகேஷ் மானே ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 SEP 2026 7:22PM by PIB Chennai

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் ஆடவர் குழுப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ருத்ராங்ஷ் பாலாசாஹிப் பட்டேல், ஹிமான்ஷூ திலான், பர்த் ராகேஷ் மானே ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் ஆடவர் குழுப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ருத்ராங்ஷ் பாலாசாஹிப் பட்டேல், ஹிமான்ஷூ திலான், பர்த் ராகேஷ் மானே ஆகியோருக்கு வாழ்த்துகள்.

சிறந்த வெற்றிப்புள்ளிகளுடன் பாராட்டத்தக்க செயல்பாட்டையும் அவர்கள் வெளிப்படுத்தினர். அவர்களுடைய கவனம், தொடர்ச்சியான செயல்பாடு, அணி செயல்பாடு ஆகியவை இந்தியாவை பெருமிதம் அடையச் செய்துள்ளது. அவர்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313160&reg=3&lang=1

***

TV/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2319571) வருகையாளர் எண்ணிக்கை : 17