நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான மத்திய அரசின் கணக்குகளின் மாதாந்திர அறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2026 4:41PM by PIB Chennai

2026 ஆகஸ்ட் வரையிலான மத்திய  அரசின் மாதாந்திரக் கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில், மத்திய அரசு மொத்தம் ரூ. 13,67,709 கோடி வருவாயைப் பெற்றுள்ளது. இதில் ரூ.8,37,921 கோடி வரி வருவாய், ரூ.4,54,549 கோடி வரி அல்லாத வருவாய், ரூ.75,239 கோடி கடன் அல்லாத மூலதன வரவுகள் ஆகியவை அடங்கும். இக்காலத்தில், வரிப் பகிர்வின் ஒரு பகுதியாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.5,90,391 கோடியை வழங்கியுள்ளது.

மத்திய அரசின் மொத்தச் செலவு ரூ.20,77,958 கோடியாகும். இதில் ரூ.15,68,009 கோடி வருவாய் கணக்கிற்கும், ரூ.5,09,949 கோடி மூலதனக் கணக்கிற்கும் செலவிடப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினத்தில், ரூ.5,14,810 கோடி வட்டி செலுத்துதலுக்காகவும், ரூ.1,87,037 கோடி முக்கிய மானியங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317034&reg=3&lang=1

***

TV/SV/RJ/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2319487) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati