பாதுகாப்பு அமைச்சகம்
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் கோராபுட் பிரிவு தயாரித்த 2000-வது விமான இயந்திரத்தை விநியோகிக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்க உள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2026 4:35PM by PIB Chennai
ஒடிசாவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் கோராபுட் பிரிவு தயாரித்த 2000-வது விமான இயந்திரத்தை வழங்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2026 அக்டோபர் 6 அன்று பங்கேற்கிறார். நாட்டின் விண்வெளி, பாதுகாப்பு உற்பத்தித் திறன்கள், ஆயுதப்படையினரின் செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் கோராபுட் பிரிவின் 60 ஆண்டுகால பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைய உள்ளது.
இந்நிகழ்ச்சி ரூ.218 கோடி முதலீட்டில் சக்தி இயந்திரங்களுக்கான 2-வது உற்பத்தி பிரிவு ஏற்படுத்தப்படுவதையும் முன்னிலைப்படுத்தும். இந்த கூடுதல் உற்பத்தி திறனானது துருவ் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், பிரசந்த் இலகு ரக போர் ஹெலிகாப்டர் உள்ளிட்ட உள்நாட்டு ஹெலிகாப்டர் தளங்களின் வளர்ந்துவரும் தேவைகளை பூர்த்திசெய்ய உதவும்.
இந்நிகழ்வு பாதுகாப்புத் தளவாடங்களை வாங்கும் நிலையில் இருந்த நாட்டை, பாதுகாப்பு தளவாடங்களை வடிவமைக்கக்கூடிய உருவாக்கக்கூடிய நாடாக மாற்ற வேண்டும் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை சுட்டிக்காட்டுகிறது. உள்நாட்டு விமான எந்திரத் தயாரிப்புத் திறன்களை வளர்ப்பது, தொலைநோக்குப் பார்வையின் முக்கிய அங்கமாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை செயலாளர் திரு சஞ்சீவ் குமார், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் திரு ரவி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319187®=3&lang=1&_gl=1
***
TV/IR/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2319349)
வருகையாளர் எண்ணிக்கை : 7