இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2026 7:43PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர்களது சிறந்த திறமை மற்றும் மன உறுதிக்குப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஜோஷ்னா சின்னப்பா தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருவதுடன், 2010-ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் வென்று வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அவரது இந்தத் சிறப்பான செயல்பாடு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இவ்விரு விளையாட்டு வீரர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணைக்கு வாழ்த்துகள். இவர்களின் திறமையும், மன உறுதியும் மிகச் சிறப்பானவை.
ஜோஷ்னா சின்னப்பாவைப் பொறுத்தவரை, அவர் தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதுடன், 2010 முதல் ஒவ்வொரு போட்டியிலும், தொடர்ந்து பதக்கம் வெல்வது அவரது திறமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அவரது இந்த சிறப்பான செயல்பாடு பாராட்டத்தக்கது.
இவ்விரு விளையாட்டு வீரர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துகள்."
****
(Release ID: 2315352)
TV/SV/RJ