பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழா தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார்.

இடுகை இடப்பட்ட நாள்: 08 SEP 2026 9:14PM by PIB Chennai

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழா  2026 தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார்.

‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பதிவுகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

“மும்பையில் நடைபெற்ற உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழா 2026 நிகழ்ச்சியில் உரையாற்றினேன்.

இந்தியாவின் குறிப்பிடத்தக்க நிதித் தொழில்நுட்பப் பயணம் மற்றும் யுபிஐ-யின் வெற்றி குறித்து பேசினேன்.

பின்வரும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தேன்:

உலக அளவில் யுபிஐ-யின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

கட்டணப் பரிவர்த்தனைகளைக் கடந்து, கடன், காப்பீடு, சேமிப்பு, முதலீடு மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகளிலும் நிதித் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தன்னியக்க தொழில்நுட்பம், கிரெடிட், டெபிட் கார்டு எண்களுக்கான டோக்கன் உருவாக்கம் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

உயர்தர இணையப் பாதுகாப்பையும், நெறிமுறைகளுடன் கூடிய தரவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

வலுவான நிதித் தொழில்நுட்ப நுகர்வோர் பாதுகாப்புக் குறியீட்டை உருவாக்குவதுடன், மேலும் அதிகமான புதுமைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.

கட்டணப் பரிவர்த்தனைகளைன் கடந்து, கடன், காப்பீடு, சேமிப்பு, முதலீடு மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகளிலும் நிதித் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தன்னியக்க தொழில்நுட்பம், கிரெடிட், டெபிட் கார்டு எண்களுக்கான டோக்கன் உருவாக்கம் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

உயர்தர இணையப் பாதுகாப்பையும், நெறிமுறைகளுடன் கூடிய தரவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

வலுவான நிதித் தொழில்நுட்ப நுகர்வோர் பாதுகாப்புக் குறியீட்டை உருவாக்குவதுடன், மேலும் அதிகமான புதுமைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308059&reg=3&lang=1

****

TV/VK/RJ

(வெளியீட்டு அடையாள எண்: 2319269) வருகையாளர் எண்ணிக்கை : 7