சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்ட கானமயில்களை இயற்கை வாழ்விடத்தில் விடும் நடவடிக்கை - மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 OCT 2026 3:14PM by PIB Chennai
ராஜஸ்தானின் மாநிலப் பறவையான கானமயில் (Great Indian Bustard–GIB) இனத்தைப் பாதுகாக்க, கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் முக்கிய நடவடிக்கையாக, ஜெய்சால்மர் பாலைவன தேசியப் பூங்காவில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட இரண்டு கானமயில் பறவைகளை இயற்கை வாழ்விடத்திற்குள் அறிமுகப்படுத்தும் செயல்முறை தொடங்கியது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேரடியாகவும், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா ஆகியோர் காணொலி மூலமாகவும் இதில் பங்கேற்றனர்.
ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், இதன் எண்ணிக்கையை அதிகரித்து இயற்கை வாழ்விடத்தில் அவை வசிக்கும் கட்டத்துக்கு முன்னேறியுள்ளன. இந்த முயற்சியின் அனுபவங்கள், எதிர்காலத்தில் பறவைகளை பாதுகாக்கும் நடைமுறைகளை அறிவியல் ரீதியாக மேம்படுத்த உதவும்.
ராம்தேவ்ராவில் ₹9.25 கோடியில் அமைக்கப்பட்ட பறவைக் கூடம், பறக்கும் திறன், இயற்கை நடத்தை ஆகியவற்றை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாம், ராம்தேவ்ரா மையங்களில் தற்போது 97 பறவைகள் உள்ளன. அவற்றில் 57 பறவைகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டவை.
தார் பாலைவன சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய இனமாக விளங்கும் கானமயில் பாதுகாப்பினால் சூழலியல் நன்மைகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் எடுத்துரைத்தார். இந்தத் திட்டத்தின் வெற்றியானது சூழல் சுற்றுலா வடிவில் உள்ளூர் சமூகங்களுக்குப் பொருளாதாரப் பலன்களையும் பெற்றுத்தரும் என்று திரு பூபேந்தர் யாதவ் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318629®=3&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2318690)
வருகையாளர் எண்ணிக்கை : 12