விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐசிஏஆர் சார்பில் நாடு முழுவதும் அதன் அலுவலகங்களில் சிறப்பு தூய்மை இயக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 03 OCT 2026 2:39PM by PIB Chennai

வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறையும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும் (ஐசிஏஆர்) இணைந்து சிறப்பு தூய்மை இயக்கம் 6.0-ஐ நேற்று (அக்டோபர் 2, 2026) நாடு முழுவதும் தொடங்கின. இதையொட்டி, ஐசிஏஆர் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் தூய்மை, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதுதில்லி புசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்திலும் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நிறுவன வளாகங்கள், கிராமங்கள் உள்ளிட்ட இடங்களில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குப்பைத் தொட்டிகள் நிறுவுதல், தூய்மைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தூய்மைப் பணியாளர்களும் தன்னார்வலர்களும் பாராட்டப்பட்டனர்.

கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318616&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2318685) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी