நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தில் 10.84 டன் போதைப்பொருட்கள் அழிப்பு - மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 3:22PM by PIB Chennai

பரிந்துரைக்கப்பட்ட சட்ட நடைமுறைகளுக்கு இணங்க, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களைத் திறம்பட அழிப்பதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மத்தியப் பிரதேசப் பிரிவு, நேற்று (01.10.2026) மத்தியப் பிரதேசத்தின் கோர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழித்தது.

இந்த நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அகற்றும் குழுவின் நேரடிக் கண்காணிப்பின் கீழும், மத்தியப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதி முன்னிலையிலும், 1985-ம் ஆண்டின் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட அகற்றும் செயல்முறைகள் பின்பற்றப்பட்டன. அப்போது கைப்பற்றப்பட்ட 10,842.150 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய பயணத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தனது கடமையில் உறுதியாக செயல்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318182&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2318651) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Telugu