ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின கிராமப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 11:27AM by PIB Chennai

பிரதமரின் ஜன்மன் எனப்படும் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் பெருந்திட்டம், பழங்குடியின கிராம வளர்ச்சித் திட்டம் ஆகிய இரு திட்டங்களின் கீழ், பழங்குடியினர் வசிக்கும் கிராமப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்துவதற்காக, ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் வழங்கல் துறை தனது இரண்டாவது ஆய்வுக் கூட்டத்தை நேற்று (30.09.2026) நடத்தியது.

இக்கூட்டத்திற்கு குடிநீர் விநியோகத் துறையின் செயலாளர் தலைமை வகித்தார். இதில் தேசிய ஜல் ஜீவன் இயக்கம், பழங்குடியினர் நல அமைச்சகம், மாநில ஊரக நீர் வழங்கல் துறை அதிகாரிகள், மாநில பழங்குடியினர் நலத் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் குடிநீர் திட்டங்களின் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டது. தகுதியுள்ள எந்தவொரு பழங்குடியின கிராமமோ அல்லது குடியிருப்போ விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317450&reg=3&lang=1

***

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317816) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Assamese