பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உயிர்களைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரின் வீரத்திற்கும், துணிச்சலுக்கும் பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 7:56AM by PIB Chennai

பெரிய ஆபத்தை எதிர்கொண்டபோதும், படுகாயம் அடைந்தபோதும், மற்றவர்களின் உயிர்களைக் காப்பதற்கு அளவற்ற துணிச்சலை வெளிப்படுத்தி, அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன் செயல்பட்ட விமானி ஸ்மித் மச்சாரைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி, பாராட்டியுள்ளார்.

கேப்டன் மச்சாரின் வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, ஒரு பெரும் துயரச் சம்பவத்தைத் தடுத்ததாக பிரதமர் கூறினார்.

கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என்று கூறியுள்ள திரு நரேந்திர மோடி, அவர் விரைவில் குணமடைந்து, புத்துணர்ச்சி பெற்று, நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு துணிச்சல் மிக்க மாவீரர்.

பெரிய ஆபத்தை எதிர்கொண்டபோதும், படுகாயம் அடைந்தபோதிலும், அவர் மற்றவர்களின் உயிரைப் பாதுகாக்க அளவற்ற துணிச்சலையும் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், ஒரு பெரும் துயரச் சம்பவத்தைத் தடுக்கவும் உதவியுள்ளது.

 

கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது.

அவர் விரைவில் குணமடைந்து, புத்துணர்ச்சி அடைந்து, நல்ல ஆரோக்கியம் பெறப் பிரார்த்திக்கிறேன்."

***

(Release ID: 2317401)

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317653) வருகையாளர் எண்ணிக்கை : 11