கனரகத் தொழில்கள் அமைச்சகம்
உள்நாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம்: மத்திய அமைச்சர் திரு எச் டி குமாரசாமி
இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2026 12:21PM by PIB Chennai
உள்நாட்டுத் தொழில்நுட்பம், உற்பத்தித் திறன்களை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் திரு எச் டி குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற நவிக்யான் 2026 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சத்தின் டிஜிட்டல் நடைமுறைகள் மற்றும் தொழில்துறையின் தாக்கம் குறித்தத் திட்ட அறிக்கையை அமைச்சர் திரு எச் டி குமாரசாமி வெளியிட்டுப் பேசினார்.
நாட்டின் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் கனரகத் தொழில்துறை அமைச்சம் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார். நவீனத் தொழில்நுட்பங்களுக்கான மாபெரும் சந்தையாக இந்தியா திகழ்கிறது என்று அவர் கூறினார். உள்நாட்டுத் தொழில்நுட்ப பயன்பாட்டுடன் ஏற்றுமதித் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே தற்சார்பு இந்தியாவின் நோக்கமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நவீனத் தொழில்நுட்பங்களை வடிவமைப்பதிலும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மூலதனப் பொருட்கள் துறையில் போட்டித்தன்மையை மேம்படுத்தும் வகையில் ரூ.1,207 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பொதுவானத் தொழில்நுட்ப மேம்பாடு, சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தின் கீழ், 33 செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக திரு எச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316863®=3&lang=1
***
TV/SV/RJ/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317166)
வருகையாளர் எண்ணிக்கை : 7