பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் டிராப் கலப்புக் குழுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2026 1:58PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் டிராப் கலப்புக் குழுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் நீரு – கினன் செனாய் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டியில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று இந்தியா ஒரு புதிய சாதனைப் படைத்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் டிராப் கலப்புக் குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் நீரு-கினன் செனாய் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டிராப் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முதல்முறையாக வெற்றி பெற்று இந்திய அணி புதிய சாதனைப் படைத்துள்ளது.
இந்திய துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் வரலாற்றில் இந்தச் சாதனை என்றென்றும் நினைவில் இருக்கும். சாதனைப் படைத்த இரு விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டுகள். எதிர்காலத்தில் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்."
***
(Release ID: 2316906)
TV/SV/RJ/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317145)
வருகையாளர் எண்ணிக்கை : 8