அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வாயுக்கள் கண்காணிப்பு தளத்தை உருவாக்குவதற்காக,தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், மல்டி நானோ சென்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 5:14PM by PIB Chennai
தொழில்துறை பாதுகாப்பு, ஹைட்ரஜன் உள்கட்டமைப்பு ஆகியவை முதல் எரிசக்தி அமைப்புகள், செயல்முறை கண்காணிப்பு ஆகியவை வரை, பல்வேறு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், வாயுக்களைக் கண்டறிந்து துல்லியமாக அளவிடும் திறன் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இத்துறையில் உள்நாட்டுத் திறன்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியமானது, மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள மெஸ்ஸர்ஸ் மல்டி நானோ சென்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆராய்ச்சி மேம்பாடு, புத்தாக்க நிதியின் கீழ் ₹37.51 கோடி நிதியுதவி வழங்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. ₹75.02 கோடி மொத்த அங்கீகரிக்கப்பட்ட செலவில் உருவாகும் இந்தத் திட்டம், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
மல்டி நானோ சென்ஸ் நிறுவனம், ஒரு கச்சிதமான வடிவத்தில் நம்பகமான முறையில் பல வகையான வாயுக்கள் உணர்தலைச் சாத்தியமாக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தளத்தை உருவாக்கி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316545®=3&lang=1
----
TV/PLM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2317028)
வருகையாளர் எண்ணிக்கை : 6