பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
வரைவு பெட்ரோலிய திருத்த மசோதாவை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2026 12:06PM by PIB Chennai
மத்தியப் பெட்ரோலிய அமைச்சகம் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகளைப் பெறும் வகையில் வரைவு பெட்ரோலியத் திருத்த மசோதாவை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மசோதா, மத்தியப் பெட்ரோலிய அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://mopng.gov.in/files/Whatsnew/Draft-Amendment-to-the-Petroleum-Act.pdf இன்று (30.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகள் அல்லது ஆலோசனைகளை அக்டோபர் 30-ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துகளை மத்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், கர்தவ்யா பவன்-03, புதுதில்லி–110001 என்ற முகவரிக்கோ அல்லது sodist-png[at]gov[dot]in மற்றும் richa.86[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு மசோதா குறித்து பெறப்படும் கருத்துகள், ஆலோசனைகள் முறையாகப் பரிசீலிக்கப்படும் என்றும் மத்தியப் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316851®=3&lang=1
***
TV/SV/RJ/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2316995)
வருகையாளர் எண்ணிக்கை : 15