பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா–இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சியான ஸ்லினெக்ஸ்-26 விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 4:30PM by PIB Chennai
இந்தியா-இலங்கை இருதரப்பு கடற்படைப் பயிற்சியான ஸ்லினெக்ஸ்-ன் 13-வது பதிப்பு, 2026 செப்டம்பர் 21 அன்று விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்தது. 2026 செப்டம்பர் 17 முதல் 21 வரை நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி, இரு கடற்படைகளுக்கும் இடையே தொழில்முறை கலந்துரையாடல்கள், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல், ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை வழங்கியது.
பயிற்சியின் துறைமுகக் கட்டத்தில், இந்தியக் கடற்படைக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையே தொழில்முறைப் பரிமாற்றங்கள், கப்பல்களுக்கு இடையேயான சந்திப்புகள், விளையாட்டுகள், கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
கடல்சார் கட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கடல்சார் பயிற்சிகள், வான்வழி நடவடிக்கைகள், கடலில் இரவு நேர எரிபொருள் நிரப்புதல், சிறப்புப் படைகளின் ஆகியவை பயிற்சிகள் இடம்பெற்றன.
ஸ்லினெக்ஸ்-26 பயிற்சியானது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கடல்சார் ஒத்துழைப்பையும், நிலையான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை நோக்கிய அவற்றின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313929®=3&lang=1
(Release ID : 2313929)
***
TV/PLM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316646)
வருகையாளர் எண்ணிக்கை : 10