குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புள்ளிவிவரம் சார்ந்த வர்த்தகப் பதிவேட்டை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 1:33PM by PIB Chennai

புள்ளிவிவரம் சார்ந்த வர்த்தகப் பதிவேடு, அது சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் தேவையான தரவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான நெறிமுறைகளை முறைப்படுத்தும் வகையிலும் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

எம்எஸ்எம்இ துறையிடம் உள்ள உத்யம் பதிவு சார்ந்த தனித்தனியான நிறுவனங்களின் தரவுகளை அதற்கான மென்பொருள் மூலம் பகிர்ந்து கொள்வது குறித்த விதிமுறைகளை இந்த ஒப்பந்தம் வரையறை செய்கிறது. இதன்மூலம், இரு அமைச்சகங்களுக்கு இடையேயான மென்பொருள் வசதி தேசிய புள்ளிவிவர வர்த்தகப் பதிவேட்டை தயாரிப்பதற்கான தரவுகளை வழங்கும்.

எம்எஸ்எம்இ துறையில் உள்ள உத்யம் பதிவு அமைப்பிலிருந்து புள்ளியியல் துறைக்கு தேவையான தரவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் புள்ளிவிவர வர்த்தகப் பதிவேட்டில் வர்த்தக நிறுவனங்கள் தொழில்துறை சார்ந்த அமைப்புகள், அதனுடன் தொடர்புடைய பிற பொருளாதார அலகுகள் ஆகியவற்றுக்கு இடையேயான பொருளாதாரம் சார்ந்த தரவுகள் இதில் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316429&reg=3&lang=1

***

SS/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316543) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी