பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்ட ஆடவர் கபடி அணிக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2026 7:51PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டு மீண்டும் சாம்பியன்களாகத் திகழும் ஆடவர் கபடி அணியினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.

அவர்களின் மன உறுதி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். அவர்களின் வெற்றி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்ட திரு மோடி, அணியினரின் எதிர்கால முயற்சிகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

"மீண்டும் சாம்பியன்கள்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்ட நமது ஆடவர்  கபடி அணிக்கு வாழ்த்துகள். அவர்களின் மன உறுதி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றி, வளர்ந்து வரும் பல வீரர்களுக்கும் ஊக்கமளிக்கும்.

அணியினர் அனைவரின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"

***

(Release ID 2315357)

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316472) வருகையாளர் எண்ணிக்கை : 12