பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரூல் சௌத்ரிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 9:24PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (தடைதாண்டும் ஓட்டம்) பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் பாரூல் சௌத்ரிக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தி சாதனைப் படைத்துள்ளதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது அரப்பணிப்பும், விடாமுயற்சியும்  பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது, எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற பாரூல் சௌத்ரியின் சிறப்பான செயல்பாடு! பதக்கம் வெல்லும் நோக்குடன் தனது திறனை வெளிப்படுத்தி சாதனைப்படைத்துள்ளது சிறப்பான தருணம் ஆகும். அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி காரணமாக பதக்கம் வென்றதுடன் நாட்டிற்கு பெருமையையும் சேர்த்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்!”

***

Release ID: 2315675

TV/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316424) வருகையாளர் எண்ணிக்கை : 9