பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெகத்லான் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின தேஜஸ்வின் சங்கருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 9:26PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெகத்லான் பிரிவில், வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் தேஜஸ்வின் சங்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களாக நடைபெறும் சவாலான போட்டியில் பங்ககேற்பதற்குத் தனித்துவமிக்க பன்முகத்திறன், சகிப்புத்தன்மை, மனஉறுதி ஆகியவை மிகவும் அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் இந்த மூன்று அம்சங்களையும் சிறந்த முறையில் வெளிப்படுத்திப் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெகத்லான் பிரிவில்  வெண்கலப்பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்கு வாழ்த்துகள்! இரண்டு நாட்களாக நடைபெறும் சவாலான போட்டிகளில் பங்கேற்பதற்குத் தனித்துவம் வாய்ந்த பன்முகத்திறன், சகிப்புத்தன்மை, மனஉறுதி ஆகியவை அவசியம். அவர் இந்த மூன்று அம்சங்களையும் வெளிப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இது ஒரு பாராட்டுக்குரிய சாதனையாகும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”

***

Release ID: 2315677

TV/SV/PS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316421) வருகையாளர் எண்ணிக்கை : 12