பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனாஹத் சிங்கிற்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 8:27PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனாஹத் சிங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து, அவரது செயல்பாடு ஈர்க்கக்கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எதிரான போட்டியில் அவர் வெளிப்படுத்திய அபாரமான திறனைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அவர் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டவும், இந்தியாவுக்கு மேலும் பல பெருமைகளைத் தேடித்தரவும் திரு மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

"அனாஹத் சிங் @Anahat_Singh13, சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்! ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் அவரது செயல்பாடு மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிரானப் போட்டியில் அவர் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி, இந்தியாவுக்கு மேலும் பல பெருமைகளைத் தேடித்தரட்டும்: பிரதமர் @narendramodi"

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315641&reg=3&lang=1

***

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2316400) வருகையாளர் எண்ணிக்கை : 12