நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை சிறப்பு இயக்கம் 6.0-இல் தூய்மை, உழைப்பு, மக்கள் பங்கேற்புக்கு முக்கியத்துவம் : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 1:50PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் அது சார்ந்த துறைகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவை இணைந்து தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் தூய்மையே சேவை என்ற சிறப்பு இயக்கம் 6.0-இல் முனைப்புடன் பங்கேற்று வருகிறது.

செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் தூய்மையே சேவை இயக்கம், மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத்துறை ஆகியவை இணைந்து நடத்துகின்றன. முழுமையான அரசு, முழுமையான சமூகம் ஆகிய அணுகுமுறைகளை கடைபிடித்து “தூய்மையான வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டுவது” என்ற கருப்பொருளுடன் இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

தூய்மையே சேவை இயக்கம் 5 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.

தூய்மைக்கான இலக்குகளில் மாற்றம்: கடினமான, இருண்ட, புறக்கணிக்கப்பட்டப் பகுதிகளைச் சீரமைத்துத் தூய்மையைப் பராமரித்தல்.

தூய்மை பாடசாலை- தூய்மை இயக்கத்தில் இளையோர் பங்கேற்பு: திடக்கழிவு மேலாண்மை நிலையங்களுக்கு இளைஞர்களை களப்பயணம் மேற்கொள்ளச் செய்து அது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதுடன் தூய்மை, மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை குறித்தக் கலந்துரையாடல் மூலம் மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்தல்.

தூய்மைப் பணியாளர் பாதுகாப்பு முகாம்கள்: சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல்

தூய்மைப்பணிகளில் மக்கள் பங்கேற்பை அதிகரித்தல்

சுழற்சி அடிப்படையிலான பொருளாதாரம், கழிவுகளிலிருந்து செல்வம் போன்ற முன்முயற்சிகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315919&reg=3&lang=1

***

TV/SV/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2316080) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada