கலாசாரத்துறை அமைச்சகம்
65-வது தேசிய கலைக் கண்காட்சியில், 20 விருதுகளை அறிவித்துள்ளது லலித் கலா அகாடமி
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2026 7:03PM by PIB Chennai
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க வருடாந்திர கலைக் கண்காட்சிகளில் ஒன்றான 65-வது தேசிய கலைக் கண்காட்சியை, லலித் கலா அகாடமி ஏற்பாடு செய்து நடத்துகிறது. இந்தக் கண்காட்சியானது, கலைஞர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தவும், பார்வையாளர்கள் நாட்டின் பன்முகத்தன்மை வாய்ந்த கலைகளுடன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் ஒரு தேசிய தளத்தை வழங்குகிறது.
65-வது தேசிய கலைக் கண்காட்சிக்கு இந்தியா முழுவதிலுமிருந்து கலைஞர்களிடமிருந்து அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது. கடுமையான தேர்வு செயல்முறைக்குப் பிறகு, முதல் நிலை நடுவர் குழு, கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக 270 கலைப்படைப்புகளைத் தேர்ந்தெடுத்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், ஓவியம், சிற்பம், அச்சுக்கலை, வரைதல் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் அமைந்துள்ளன பிரதிபலிக்கின்றன. இவை இந்தியக் கலை வெளிப்பாட்டின் செழுமையையும், கலைஞர்களின் ஈடுபாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.
விருது பெறும் படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட இரண்டாம் நிலை நடுவர் குழு, லலித் கலா அகாடமி விருதுகளுக்காக 20 கலைஞர்களின் 20 கலைப்படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315617®=48&lang=1
****
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2315656)
வருகையாளர் எண்ணிக்கை : 9