பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏடிஎம்எம் பிளஸ் கடல்சார் பாதுகாப்பு கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கையில் இந்திய கடற்படைக் கப்பல்களான சஹ்யாத்ரி, குலிஷ் பங்கேற்றன

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2026 5:52PM by PIB Chennai

இந்தியக் கடற்படையின் முன்னணி மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, ஏவுகணைக் கப்பலான ஐஎன்எஸ் குலிஷ் ஆகியவை, பிலிப்பைன்ஸின் சுபிக் வளைகுடாவில் 2026 செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற 23-வது ஏடிஎம்எம் பிளஸ் எனப்படும் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான கூடுதல் பாதுகாப்பு அமைப்பின் கடல்சார் பாதுகாப்புக்கான நிபுணர்கள் செயற்குழுவின் கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கையில் பங்கேற்றன.

இந்த நிகழ்வு, 2026 செப்டம்பர் 21 அன்று , சுபிக் கடற்படை செயல்பாட்டுத் தளத்தில் தொடக்க விழாவுடன் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியை பிலிப்பைன்ஸ் கடற்படை நடத்தியது. ஜப்பான் இதனை இணைந்து நடத்தியது. துறைமுகக் கட்டத்தின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு குறித்த துறைசார் நிபுணர் பரிமாற்றங்கள், ஆசியான் கடற்படைத் தளபதிகள் கூட்டம் ஆகியவற்றுடன், விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

2026 செப்டம்பர் 22 அன்று, இந்தியக் கடற்படை வீரர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

கடல்சார் கட்டமானது, தேடுதல், மீட்பு, நீரியல் ஆய்வு, தரைதட்டிய கப்பல்களுக்கு உதவுதல் உள்ளிட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருந்தது. இந்தச் செயல்பாடுகள் கடலில் செயல்பாட்டு ஒருங்கிணைப்பையும், இயங்கும் திறனையும் மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க வாய்ப்புகளை வழங்கின.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315585&reg=3&lang=1

****

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2315653) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam