உள்துறை அமைச்சகம்
நான்காவது உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சி - மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 5:47PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (25.09.2026) கிரேட்டர் நொய்டாவில் உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் நான்காவது பதிப்பைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பொருளாதாரம் 'பலவீனமான 5' நாடுகளின் பொருளாதாரங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது என்றும், இப்போது இந்தியப் பொருளாதாரம் பலமான முதல் 5 இடங்களுக்குள் உள்ளது என்றும் கூறினார்.
உத்தரப் பிரதேசம் இப்போது ஒரு முதலீட்டு மையமாகவும், இந்தியாவின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாகவும் உருவெடுத்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். அரசின் காரணமாகவே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சுமார் 24 கோடி மக்கள்தொகையுடன், உத்தரப் பிரதேசம் நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக உள்ளது என்று அவர் கூறினார். இங்கு ஏராளமான நீர் வளங்கள், நிலம், கடினமாக உழைக்கும் மக்கள் உள்ளனர் எனவும் தற்போது தொழில்துறைக்கு உகந்த சூழலும் உள்ளது என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314972®=3&lang=1
(Release ID : 2314972)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2315172)
வருகையாளர் எண்ணிக்கை : 12