வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவிசார் குறியீடு பெற்ற குல்பர்கா துவரம் பருப்பு, அபேடா ஆதரவுடன் மாலத்தீவுக்கு ஏற்றுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2026 3:42PM by PIB Chennai

வேளாண்,  பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா, நேற்று (2026 செப்டம்பர் 24), கர்நாடகாவிலிருந்து மாலத்தீவுக்கு, புவிசார் குறியீடு பெற்ற 1 மெட்ரிக் டன் குல்பர்கா துவரம் பருப்பை ஏற்றுமதி செய்ய உதவியது. இந்தியாவின் புவிசார் குறியீட்டு வேளாண் பொருட்களுக்கான சர்வதேச சந்தைகளை விரிவுபடுத்துவதையும், வேளாண் ஏற்றுமதியில், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் வர்த்தகப் பங்களிப்பை வலுப்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் தற்போதைய சந்தை விலை ஒரு கிலோவுக்கு ரூ.60 ஆக இருக்கும் நிலையில், ஏற்றுமதி சார்ந்த வழித்தடத்தின் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை ஒரு கிலோவுக்கு ரூ.82 ஆகும். இது 30 சதவீதத்திற்கும் அதிகமான விலையாகும்.

மைசூரைச் சேர்ந்த மெசர்ஸ் சில்கன் குளோபல் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போர்ட்ஸ் நிறுவனம், இதனை மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

கர்நாடகாவின் கலபுரகி பகுதியைச் சேர்ந்த குல்பர்கா துவரம் பருப்பு, 2019-ம் ஆண்டில் புவியியல் குறியீடு பெற்றது. இந்தத் தயாரிப்பு அதன் தனித்துவமான சுவை, தரத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியின் வேளாண் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாகவும் விளங்குகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314853&reg=3&lang=2

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2315090) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Kannada