குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 2:20PM by PIB Chennai
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளையொட்டி குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் உள்ள அவரது திருவுவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (25.09.2026) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவை நினைவுகூர்ந்துள்ள குடியரசு துணைத்தலைவர், அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி என்று கூறியுள்ளார். இந்திய சிந்தனைகளிலும் மரபுகளிலும் வேரூன்றிய ஒரு இணக்கமான கட்டமைப்பிற்குள் தனிநபர், சமூகம், தேசம் ஆகியவற்றை நிலைநிறுத்த முயன்ற பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயத் தத்துவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா எப்போதும் நாட்டிற்கும் நாட்டின் சேவைக்கும் முன்னுரிமை அளித்தார் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
***
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2314917)
வருகையாளர் எண்ணிக்கை : 10