பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சீமாவுக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
24 SEP 2026 7:43PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சீமா குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பெருமிதம் தெரிவித்ததுடன், அவரது இந்தச் சாதனைக்காக வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தந்த சீமாவின் உறுதியான செயல் திறனைப் பிரதமர் பாராட்டினார். சகிப்புத்தன்மை, ஒழுக்கம், பல ஆண்டுகால கடின உழைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் அற்புதமான சாதனை இது என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும், வருங்காலத்தில், அவர் இன்னும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சீமா குறித்துப் பெருமிதம் கொள்கிறேன்! அவருக்கு எனது வாழ்த்துகள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில், இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தந்த அவரது செயல் திறன் உறுதியானது. சகிப்புத்தன்மை, ஒழுக்கம், பல ஆண்டுகாலக் கடின உழைப்பை வெளிப்படுத்தும் அற்புதமான சாதனை இது.
வருங்காலத்தில் அவர் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்."
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314570®=3&lang=1
(Release ID: 2314570)
****
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314640)
வருகையாளர் எண்ணிக்கை : 11