ரெயில்வே அமைச்சகம்
மத்திய கான்பூர் – ஆனந்த் விஹார் இடையே புதிய தினசரி ரயில் சேவையைத் தொடங்க இந்திய ரயில்வே ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
24 SEP 2026 3:17PM by PIB Chennai
கான்பூர் - தில்லி இடையே இரவு நேர ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய கான்பூர் – ஆனந்த் விஹார் இடையே புதிய தினசரி ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய கான்பூர் – ஆனந்த் விஹார் – மத்திய கான்பூர் இடையே ரயில் எண்: 14153/14154 என்ற எண் கொண்ட ரயில் இயக்கப்படும்.
மத்திய கான்பூரிலிருந்து இரவு 8:40 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 4:50 மணிக்கு ஆனந்த விஹார் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஆனந்த் விஹாரிலிருந்து இரவு 11:25 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:25 மணிக்கு மத்திய கான்பூர் சென்றடையும். 428 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 10 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314361®=3&lang=1
****
SS/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314566)
வருகையாளர் எண்ணிக்கை : 17