நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமில் 86 உயிருள்ள டோக்கே பல்லிகள் பறிமுதல் : இருவர் கைது

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 8:13PM by PIB Chennai

சட்டவிரோத வனவிலங்கு கடத்தல் குறித்த உளவுத் தகவலின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், நேற்று (22.09.2026) அசாமின் மரியானியில் உள்ள பந்தர் சாலியா காவ்ன் மைதானத்தில் இரண்டு நபர்களை சோதனையிட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, ​​அழிந்துவரும் வனவிலங்கு இனமான 86 உயிருள்ள டோக்கே பல்லிகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. 1972-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் அந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட உயிருள்ள பல்லிகளும், அசாமில் உள்ள மரியானி சரக வனத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

வனவிலங்கு இனங்களின் சட்டவிரோத கடத்தலைக் கண்டறிந்து முறியடிப்பதற்கான வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314150&reg=3&lang=1

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2314411) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Assamese , Telugu