நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பங்களாதேஷிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான சுமார் 12 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 9:07PM by PIB Chennai

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), எல்லைப் பாதுகாப்புப் படையுடன் (பிஎஸ்எஃப்) இணைந்து, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில், மொத்தம் சுமார் ரூ.17 கோடி மதிப்புள்ள 12 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது.

செப்டம்பர் 20, 21 தேதிகளில், மேற்கு வங்கத்தின் 'பிஓபி கோங்ரா' பகுதிக்கு உட்பட்ட இந்திய-பங்களாதேஷ் எல்லைப் பகுதிக்கு அருகே, பிஎஸ்எஃப் வீரர்கள், சுமார் 3.15 கிலோ எடையுள்ள, வெளிநாட்டுக் கடத்தல் தங்கக் கட்டிகளை மீட்டனர். அதனைத் தொடர்ந்து, டிஆர்ஐ அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

21.09.2026 அன்று நடைபெற்ற மற்றொரு நடவடிக்கையில், இந்திய- பங்களாதேஷ் எல்லையில் ள்ள ஹத்கோலா கிராமத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த, சுமார் 1.16 கிலோ எடையுள்ள வெளிநாட்டுக் கடத்தல் தங்கக் கட்டிகளை பிஎஸ்எஃப் வீரர்கள் மீட்டனர். முன்னதாக, செப்டம்பர் 10, 11 தேதிகளில், பாத்தர்கட்டா பகுதியில் இந்திய-பங்களாதேஷ் எல்லை அருகே, சுமார் 5.9 கிலோ எடையுள்ள வெளிநாட்டுத் தங்கக் கட்டிகள் பிஎஸ்எஃப் வீரர்களால் மீட்கப்பட்டு டிஆர்ஐ அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

பாட்னாவில், ரயில் பயணி ஒருவரிடமிருந்து சுமார் 1.71 கிலோ எடையுள்ள, வெளிநாட்டுத் தங்கத்தை டிஆர்ஐ அதிகாரிகள் கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தங்கம் பங்களாதேஷில் ருந்து கடத்தி வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314188&reg=3&lang=1

***

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2314383) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Telugu