திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகத் திறன் போட்டி ஷாங்காயில் தொடக்கம் - இந்தியாவின் சார்பில் மிகப்பெரிய குழு பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2026 4:45PM by PIB Chennai

உலகத் திறன் போட்டி -2026, சீனாவின் ஷாங்காயில் இன்று (23.09.2026) தொடங்கியது. இதில், இந்திய அணியின் சார்பில் வரலாற்றிலேயே மிகப்பெரிய குழுவாக 70 இளம் போட்டியாளர்கள், 63 திறன் பிரிவுகளில் களமிறங்கியுள்ளனர். நேற்று மாலை நடைபெற்ற தொடக்க விழாவைத் தொடர்ந்து இந்த நான்கு நாள் போட்டி நடைபெறுகிறது. அந்த விழாவில், இந்திய அணி உலகெங்கிலும் உள்ள அணிகளுடன் இணைந்து நாடுகளின் அணிவகுப்பில் பங்கேற்றது.

ஷாங்காய் உலக கண்காட்சி கலாச்சார மையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், 65-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஏறத்தாழ 1,400 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏந்தியவாறும், இந்திய அணியின் வண்ணங்களில் ஆடை அணிந்தவாறும் இந்தியக் குழுவினர், பலத்த கரவொலிகளுக்கு மத்தியில் அரங்கத்திற்குள் அணிவகுத்துச் சென்றனர். இது 48-வது உலகத் திறன்கள் போட்டியின் முறையான தொடக்கமாக அமைந்தது.

இந்நிகழ்ச்சிக்கு சீன அதிபர் திரு ஷி ஜின்பிங் அனுப்பிய வாழ்த்துக் கடிதம், தொடக்க விழாவில் வாசிக்கப்பட்டது. சீனப் பிரதமர் லி கியாங் இந்த விழாவில் கலந்துகொண்டு, போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் இந்தியா சார்பில் மத்திய, திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் திருமதி மனிஷா சென்ஷர்மா, தேசிய திறன் அமைப்பின் தலைமை இயக்குநர் திலீப் குமார் ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313946&reg=3&lang=1  

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2314370) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam