நிதி அமைச்சகம்
மும்பை நவ ஷேவா துறைமுகத்தில் ₹3 கோடி மதிப்புள்ள பட்டாசுகளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 8:07PM by PIB Chennai
உளவுத் தகவல் அடிப்படையில் நடவடிக்கையில், மும்பை நவ ஷேவா துறைமுகத்தில் பட்டாசுகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு இறக்குமதி சரக்கை வருவாய் புலனாய்வு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது “பாட்டில், வால்பேப்பர்” என்ற பெயரிலான பொருட்களின் போர்வையில் பட்டாசுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
விரிவான பரிசோதனையின் விளைவாக, ஏறத்தாழ 10,000 கிலோ எடையும் சுமார் ₹3 கோடி சந்தை மதிப்பும் கொண்ட பட்டாசுகள் மீட்கப்பட்டன. அந்தப் பட்டாசுகளும் 1962-ம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் பட்டாசுகளின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதாகும். இதற்கு, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடமிருந்து முறையான அங்கீகாரமும், 2008-ம் ஆண்டின் வெடிபொருள் விதிகளின் கீழ் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து தேவையான உரிமமும் தேவைப்படுகிறது.
இந்த அனுமதிகள் இல்லாமல் இவற்றைக் கடத்தி வந்த நபர் ஒருவர் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314148®=3&lang=1
***
TV/PLM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2314358)
வருகையாளர் எண்ணிக்கை : 7