புவி அறிவியல் அமைச்சகம்
கடற்கரை தூய்மை இயக்கம், பொதுமக்களின் பங்கேற்பை விரிவுபடுத்தியுள்ளது : மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 4:39PM by PIB Chennai
நாளை (19.09.2026) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் "சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை" முன்னிட்டு, ஜூஹு கடற்கரையில் இன்று (18.09.2026) நடைபெற்ற கடற்கரை தூய்மைப் பணிக்கு, மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார். இதில் பேசிய அவர் இந்தியாவின் ஆராயப்படாத கடல் வளத்தை எடுத்துரைத்ததோடு, பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஆழ்கடல் திட்டத்தை இந்தியாவின் நீலப் பொருளாதாரத்தின் வழிகாட்டி என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது 2022-ல் தொடங்கப்பட்ட கடற்கரை தூய்மை இயக்கம், தூய்மையான கடற்கரைகள், பாதுகாப்பான கடல்களுக்கான ஒட்டுமொத்த அரசு, ஒட்டுமொத்த சமூக இயக்கமாக உருவெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
75 நாட்கள் நீடித்த அமைச்சகங்களுக்கு இடையேயான இயக்கமாகத் தொடங்கிய இது, இந்தியாவின் கடல்சார் சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டு முயற்சியில் அரசு நிறுவனங்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் விதமாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படும் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நாடு தழுவிய முன்முயற்சியாக இது வளர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டுக்கான பிரச்சாரம் செப்டம்பர் 12 முதல் 19 வரை நடத்தப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு மும்பை ஜூஹு கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடற்கரை தூய்மைப் பணித் திட்டத்திற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார். புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் டி. சீனிவாச குமார் தும்மலா, பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ், புவி அறிவியல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தன்னார்வலர்களுடன் இணைந்து கடற்கரையிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளையும் பிற கழிவுகளையும் அகற்றினார்.
இந்த இயக்கமானது கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநில அரசுகள், மத்திய அரசுத் துறைகள், முகமைகள், இந்திய கடலோரக் காவல்படை, இந்திய கடற்படை, மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், உள்ளூர் சமூகத்தினரை ஒன்றிணைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312067®=3&lang=1
***
(Release ID : 2312067)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2314120)
வருகையாளர் எண்ணிக்கை : 9