பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மகளிர் மற்றும் குழந்தைள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் சிறப்பு இயக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 2:43PM by PIB Chennai

நடப்பாண்டு 6-வது சிறப்பு இயக்கத்தை மேற்கொள்ள மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், திட்ட பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு இயக்கத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் இந்த பிரச்சாரத்தில் ஆர்வத்துடனும் முனைப்புடனும் பங்கேற்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு அனில் மாலிக் வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு பிரசார இயக்கத்தின் மூலம், அங்கன்வாடி, குழந்தைகள் காப்பகம், மகளிர் தங்கும் விடுதிகள் உள்பட ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 620 இடங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், பழைய பொருட்கள் மற்றும் மின்னணு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு அதன் மூலம் ரூ.14.29 லட்சம் வருவாய் ஈட்டப்பட்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களின் 10,126 குறைகளும், 1,877 மேல்முறையீட்டு குறைகளும் தீர்த்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311958&reg=3&lang=1

***

TV/AC/SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2314118) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi