கலாசாரத்துறை அமைச்சகம்
பிரதமர் நினைவுப் பரிசுகள் மின்னணு ஏலத்தில் இடம்பெற்றுள்ள அசாமின் பாரம்பரியக் கலைப்பொருட்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 6:25PM by PIB Chennai
பிரதமர் நினைவுப் பரிசுகள் மின்னணு ஏலத்தின் 8-ஆவது பதிப்பு-2026-ல் அசாமின் பாரம்பரிய கலாச்சாரமும் கைவினைக் பொருட்களும் இடம்பெற்றுள்ளன. அசாமின் கைத்தறி, மூங்கில் மற்றும் பிரம்புப் பொருட்கள், பித்தளைப் பொருட்கள், பாரம்பரிய ஓவியங்கள் மற்றும் கட்டிடக் கலை ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
அசாமின் பல தலைமுறைகளாகத் தொடரும் கலைத்திறனையும் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு நினைவுப் பரிசுகள் இடம்பெற்றுள்ளன. சதி சாதானி, பாரத ரத்னா விருது பெற்ற லோக்பிரிய கோபிநாத் போர்தோலோய், மகாபுருஷ் ஸ்ரீமந்த சங்கரதேவர் ஆகியோருடன் தொடர்புடைய கலைப்பொருட்களும் உள்ளன. 1894ம் ஆண்டு பதருகாட் போராட்டம், போர்துவா சத்திரம் மற்றும் பூங்கா ஆகியவற்றின் பிரதிநிதித்துவப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன.
சதி சாதானி ஓவியம், மூங்கில்-பிரம்பு கடிகாரம், நீர்யாசிந்த் செடியால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், பாரம்பரிய ஜாப்பி, அசாமிய கமுசா, பித்தளை சோராய் மற்றும் காமாக்யா கோயில் மர வேலைப்பாடுகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
இந்த ஏலத்தில் மொத்தம் 1,498 நினைவுப் பரிசுகள் இடம்பெற்றுள்ளன. ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதியைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் தூய்மை கங்கை திட்டத்துக்கு வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313597®=3&lang=1
***
TV/VK/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2313998)
வருகையாளர் எண்ணிக்கை : 5