பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 12:47PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவருடைய உறுதிப்பாடும், தொடர்ச்சியான செயல்பாடும் நாட்டிற்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், மீராபாய் சானுவால் இந்தியா பெருமை அடைவதாகக் கூறியுள்ளார். மேலும் அவருடைய எதிர்கால முயற்சிகளுக்குத் தமது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:
"மீராபாய் சானுக்கு ஒரு சிறப்புமிக்க வெள்ளிப்பதக்கம்!
பளுதூக்குதல் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவருடைய உறுதிப்பாடும், தொடர்ச்சியான செயல்பாடும் நாட்டிற்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவரால் இந்தியா பெருமை அடைகிறது. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."
***
Release ID: 2313773
SS/IR/SM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2313899)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam