உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
உடான் திட்டத்தின் அடுத்தக் கூட்டம் துவக்கம்: 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 7:10PM by PIB Chennai
உடான் திட்டத்தின் அடுத்தக் கட்டத்தின் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் 21 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று கையெழுத்திட்டது. இதன் மூலம், நாடு முழுவதும் பிராந்திய விமானப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையை அமைச்சகம் மேற்கொண்டது. விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், விமானச் சேவை வசதி இல்லாத அல்லது போதிய சேவை இல்லாத பகுதிகளுக்கு இணைப்பை விரிவுபடுத்துவதிலும் மத்திய மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பில் இந்த ஒப்பந்தங்கள் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளன.
இந்த நிகழ்ச்சியை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார். சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹோல், செயலாளர் திரு சமீர் குமார் சின்ஹா, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் திரு விபின் குமார் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ராம் மோகன் நாயுடு, "மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டம், குறைந்த கட்டணம், செயல்பாடுகளின் நிலைத்தன்மை, திட்டங்களுக்கான வெளிப்படையான சவால் முறை கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிவில் விமானம்' என்ற உயரிய இலக்கை நோக்கி ஒரு சூழலியலை நாம் கூட்டாக உருவாக்கி வருகிறோம். உடான் திட்டத்தின் இந்தப் புதிய கட்டம் நம்மை அந்தத் பாதையில் அழைத்துச் செல்கிறது," என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313612®=3&lang=1
***
TV/BR/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2313830)
வருகையாளர் எண்ணிக்கை : 2