தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் மொபைல் நெட்வொர்க் தர சோதனையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 1:29PM by PIB Chennai

குஜராத் மாநிலத்தில் காந்திதாம் முதல் சந்தல்பூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-27) இந்தியத் தொலைத்தொடர்பு ழுங்குமுறை ஆணையம் 2026 ஜூலை மாதத்தில் மொபைல் தொலைத்தொடர்பு சேவை சோதனையை நடத்தியது. தரவு பதிவிறக்கம், பதிவேற்றம் உள்ளிட்டவற்றை அது ஆய்வு செய்தது. நகரங்கள், முக்கியப் பகுதிகள், பொது போக்குவரத்து இடங்கள், போன்றவற்றில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்தது.

2026 ஜூலை 1  அன்று 149.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு இச்சோதனை நடைபெற்றது. ஜெய்பூரில் உள்ள இந்திய தொலைத்தொடர்பு ழுங்குமுறை ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் இது நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313358&reg=3&lang=1

***

SS/IR/PS/SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2313529) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी