நிலக்கரி அமைச்சகம்
இந்திய நிலக்கரி நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் சமூக நற்பணிக்காக ரூ.7,276 கோடி அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 12:07PM by PIB Chennai
நாட்டின் மிகக்குறைந்த வளங்களைக் கொண்ட, பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் மாவட்டங்களில் செயல்படும் இந்திய நிலக்கரி நிறுவனம் சமூகத்திற்கு பங்களிக்கும் சிந்தனைக் கொண்ட நிறுவனமாகும். நிறுவனங்கள் சட்டம் 2013, பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வை சட்டப்பூர்வக் கடமையாக மாற்றுவதற்கு முன்பே இந்திய நிலக்கரி நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் சமூக மேம்பாட்டுக் கொள்கை 2005-ன் கீழ், தங்களுடைய சுரங்கப் பகுதிகளின் அருகே உள்ள இடங்களில் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டனர்.
சுரங்க நடவடிக்கைகள் நடைபெறும் பகுதிகளிலிருந்து 8 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள கிராமங்களுக்குக் குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம்கள், சிறிய உள்கட்டமைப்பு வசதிகள் ஆகிய பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 2011-12 முதல் 2013-14 வரை இந்திய நிலக்கரி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு செலவினம் ரூ.82 கோடி (2011-12) முதல் ரூ.409 கோடி (2013-14) வரை இருந்தது.
இந்நிலையில் நிறுவனங்கள் தங்களுடைய சராசரி நிகர லாபத்தில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியை பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) நடவடிக்கைகளுக்குச் செலவிட வேண்டிய கட்டாயத்தை நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 135 ஏற்படுத்தியது. அதன்படி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு, செலவினத்தில் குறைந்தது 80 சதவிதம் சுரங்கங்கள், நிறுவனங்களின் 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள பகுதிகளுக்குக் குறிப்பாக திட்டத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து செலவிடப்படுகிறது. 2014-15 முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சட்டப்பூர்வமாக ரூ.5,795 கோடி செலவிடப்பட வேண்டியிருந்த நிலையில் இந்திய நிலக்கரி நிறுவனம் ரூ.7,276 கோடி செலவிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313321®=3&lang=1
***
SS/IR/PS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313438)
வருகையாளர் எண்ணிக்கை : 8