சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 1033 என்ற உதவி எண்ணை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேம்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2026 5:29PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களுக்கு விரைவான, சிறந்த உதவியை வழங்குவதற்காக, தற்போதுள்ள தனது 1033 தேசிய நெடுஞ்சாலை உதவி எண்ணை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட 1033 உதவி எண், செயற்கை நுண்ணறிவு, நிகழ்நேர இருப்பிடக் கண்காணிப்பு, திறன்மிகு அவசரகால அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும். இந்த மேம்பாடுகள், அழைப்பவர்களின் இருப்பிடத்தைக் கண்டறியவும், பல்வேறு இந்திய மொழிகளில் வரும் அழைப்புகளைப் புரிந்துகொள்ளவும், சரியான உதவியை அந்த இடத்திற்கு விரைவாக அனுப்பவும் உதவும். குறிப்பாக, மனிதர்களின் கணிப்பும் முடிவெடுக்கும் திறனும் அவசியமான அவசரகாலச் சூழ்நிலைகளில், மனித இயக்குநர்கள் தொடர்ந்து ஒரு முக்கியப் பங்கை வகிப்பார்கள்.

1033 உதவி எண் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் செயல்படும். இது தேசிய நெடுஞ்சாலைப் பயனர்களுக்குப் பின்வருவனவற்றில் உதவுகிறது:

* மருத்துவ அவசரநிலைகள்.

* வாகனப் பழுதுகள்.

* ஆம்புலன்ஸ்கள், கிரேன்கள், ரோந்து வாகனங்களின் உதவி.

* சுங்கச்சாவடி, ஃபாஸ்டேக் தொடர்பான சிக்கல்கள்.

* தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது எதிர்கொள்ளும் பிற பிரச்சனைகள்.

இந்த உதவி எண் தற்போது 1.46 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கியுள்ளதுடன், தினமும் சுமார் 15,000 அழைப்புகளைப் பெறுகிறது. மேலும், இது பல மொழிகளிலும் உதவியை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310140&reg=48&lang=2

****

TV/PLM/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313350) வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Telugu